Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 29, 2016

வெடி விபத்தால் தரைமட்டமான வீடுகள்!


தமிழகத்தில் இன்று தீபாவளி கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வீடுகள் எரிந்து நாசமானது.

திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூர் மக்கான் தெருவில் வெடிக்கப்பட்ட பட்டாசு தீப்பொறியால் 3 வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பாம்பாறு அகதிகள் முகாம் உள்ளது. இங்கு பட்டாசு வெடித்தபோது தீ விபத்து ஏற்பட்டது. இதில் 6 குடிசைகள் வீடுகள் எரிந்தது.



திருவாரூர் மாவட்டம், புலிவலம் பகுதியில் வெடி வெடித்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் 7 குடிசை வீடுகள் எரிந்து சேதம் அடைந்தது. தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில் வந்து தீயை அணைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஜாபர்பேக் தெருவில் பட்டாசு தீப்பொறியால் குடிசைகள் எரிந்து சேதம் அடைந்தது. அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே சென்னிவனத்தில் பட்டாசு தீப்பொறியால் 3 வீடுகள் எரிந்து நாசமானது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.