Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 24, 2016

தாஜ்மகாலில் அற்புதமான தருணத்தை உருவாக்கிய புகைப்படக்காரர்


மோஹித் தேஜ்பால், 25 வயது புகைப்படக் கலைஞர். Photofie ஏற்பாடு செய்திருந்தப் போட்டியில் பயண புகைப்படத்திற்கான விருது பெற்றவர். ஆனால் செய்தி அது கிடையாது. மோஹித் விருது பெற வழிவகுத்த புகைப்படம் தான், இருவரை வாழ்க்கையில் இணைய செய்துள்ளது.


2013 ஆம் ஆண்டு பிரான்ஸ் சுற்றுலா பயணிகள் மெளரத் பெஜி மற்றும் கொலம்பைன் ரூயிஸ் ஆகிய இருவரையும் தன் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க சொன்னார் மோஹித். அந்த சுற்றுலா பயணிகளும் ரோஹித்துக்கு உதவும் நோக்கத்தில்,  தாஜ் மஹால் அருகே உள்ள மண்டபத்தின் வாயிலில் கைகோர்த்தபடி,  நின்றும்,  அமர்ந்தும் போஸ் கொடுத்தனர். அப்படி எடுக்கப்பட்ட, கீழே உள்ள புகைப்படம்தான் Judges Choice Travel Photography விருது பெற்றுள்ளது.




மோஹித்தின் புகைப்படம் விருது வென்றதை கேள்விப்பட்ட அந்த பிரான்ஸ் சுற்றுலா பயணிகள், மோஹித்திற்கு மனம் உருகி செய்தி ஒன்றை அனுப்பி வைத்திருந்தனர்.


அதில், 'உங்கள் புகைப்படம் விருது பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது மோஹித். அந்த புகைப்படம் எடுக்கும் பொழுது நானும் மெளரத்தும் நண்பர்கள் மட்டும் தான். ஆனால் நீங்கள் புகைப்படத்திற்காக கை கோர்த்து நிற்க சொன்ன போது, இருவருக்கும் சங்கடமாக இருந்தது. ஆனாலும் புகைப்படம் அழகாக வர வேண்டும் என்பதற்காக கை கோர்த்து நின்றோம். நாங்கள் இருவரும் முதன்முறையாக கைகோர்த்து நின்ற தருணம் அது. அதற்கு பின்னர் நாங்கள் இருவரும் காதலிக்க தொடங்கிவிட்டோம். தாஜ்மகால் என்னும் அற்புதமான இடத்தில் தோன்றிய அற்புதமான தருணம். இன்றோடு உங்கள் புகைப்படத்திற்காக நாங்கள் கைக்கோர்த்து நின்று இரண்டு வருடங்கள் கடந்துவிட்டது. இன்னும் அன்பில் இணைந்துதான் இருக்கிறோம். உங்கள் கலையால் இது போன்ற அற்புத தருணங்களை உருவாக்க வாழ்த்துகள்' இவ்வாறு எழுதியிருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.