தொகுதி பிரச்னைகளை 40 நாட்களுக்கு தீர்க்க வேண்டும் என கொந்தளிக்கிறார் நாங்குநேரி எம்.எல்.ஏ வசந்தகுமார்.
நெல்லை மாவட்டம், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பிரபல தொழிலதிபர் எச்.வசந்தகுமார். இவர், கடந்த சில மாதங்களாக தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது தொகுதி மக்கள், குடிநீர், போக்குவரத்து, சாலை, மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக தீர்வு கோரி வசந்தகுமாரிடம் புகார் மனுக்களைத் கொடுத்தனர். அதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வசந்தகுமார் தெரிவித்தார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தொடர்ந்து சட்டமன்றத்திலும் இந்த பிரச்னை குறித்துப் பேசினார். அப்போது வசந்தகுமார் பேசியதற்கு பதிலளித்த அமைச்சர்கள் அவரது குற்றச்சாட்டுக்களை முழுமையாக மறுத்தனர்.
இதுகுறித்து வசந்தகுமார் எம்.எல்.ஏ கூறுகையில், "நாங்குநேரி தொகுதியில் மக்களுக்குத் தேவையான எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. குறிப்பாக போக்குவரத்து, குடிநீர், மருத்துவ வசதி ஆகியவை கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இதுதொடர்பான புகார்கள் எனக்கு ஏராளமாக வந்த வண்ணம் உள்ளன. நாங்குநேரி தொகுதியில் உள்ள பத்மநாபபுரம் ஊருக்கு பஸ் வசதி இல்லை. இதுதொடர்பாக நெல்லை அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து சட்டமன்றத்தில் இதுதொடர்பாக பேசினேன். அப்போது பதிலளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பஸ்கள் இயக்கப்படுவதாக பொய் சொல்கிறார். ஒவ்வொரு மாதமும் ஒரு அமைச்சர்கள் என்னோடு நாங்குநேரிக்கு வந்தால் அவர்களை அழைத்து சென்று மக்களின் குறைகளை காண்பிக்க தயாராக உள்ளேன்.
ஏற்கனவே நான் எம்.எல்.ஏ இருந்தபோது இயக்கப்பட்ட பஸ்கள் கூட அங்கு நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் அந்த கிராம மக்கள் 4 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுபோல தொகுதியில் உள்ள நாங்குநேரி மற்றும் களக்காடு, மூலைக்கரைப்பட்டி ஆகியவற்றில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதியளவில் மருத்துவர்கள் இல்லை. நாங்குநேரி அரசு மருத்துவமனையில் 6 டாக்டர்கள் பணியில் உள்ளனர். ஆனால் சுகாதாரத்துறை அமைச்சரோ 9 மருத்துவர்கள் இருப்பதாக சொல்கிறார். களக்காடு மற்றும் மூலைக்கரைப்பட்டியில் நர்சுகளே சிகிச்சை அளிக்கும் நிலை உள்ளது.

அடுத்து நாங்குநேரி தொகுதி முழுவதும் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. குடிநீருக்காக மக்கள் நீண்ட தூரம் குடத்துடன் செல்லும் அவலம் உள்ளது. இதைத்தடுக்க மக்களுக்குத் தேவையான குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் சிங்கிகுளம் முதல் பானாங்குளம் வரையிலான கால்வாய் மற்றும் செங்களகுறிச்சி கால்வாய்களை என்னுடைய சொந்த செலவில் தூர்வாரி வருகிறேன். எம்.எல்.ஏ நிதியிலும் குடிநீர் குழாய்களை அமைத்துள்ளேன். குடிநீர் திட்டம் தொடர்பான டென்டர் விடுவதிலும் சில சிக்கல்கள் உள்ளன. நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட கே.டி.சி நகர் மங்கம்மா சாலை கடந்த 10 வருடமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அந்த சாலையை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விரைவில் மக்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தப்படும்.
நாங்குநேரி தொகுதியில் நிலவும் பிரச்னைகளுக்கு அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக 40 நாட்கள் காலஅவகாசம் கொடுத்துள்ளேன். இன்றோடு 20 நாட்கள் கடந்து விட்டன. அடுத்த 20 நாட்களுக்குள் மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவில்லை என்றால் உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு கலெக்டர் அலுவலகம் முன்பு எனது தலைமையில் போராட்டம் நடத்தப்படும். 'தமிழக அரசே வேண்டும், வேண்டும் குடிக்க குடிநீர் வழங்க வேண்டும்' என்ற ஸ்லோகத்துடன் தமிழகம் முழுவதும் இயக்கம் நடத்த உள்ளேன்" என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.