கோடிக்கணக்கில் இவருக்கு பரிசு குவிகிறது... சர்வதேச போட்டி நிறைவு விழாவில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏந்தி வலம் வருகிறார்... சேலம் அருகே குக்கிராமத்தில், மிகச்சாதாரண குடும்பத்தில் பிறந்த மாரியப்பன், பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் இன்று இந்தியாவின் முகமாக மாறியிருக்கிறார்.
ஆனால் பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதற்கும் முன்னர் மாரியப்பன் பற்றியெல்லாம் நமக்கு தெரியாது. அவருக்கு பாதுகாப்பும், நம்பிக்கையும் கொடுக்க அவரது குடும்பத்தாரை தவிர இருந்த ஒரே ஒருவர் சத்தியநாராயணா. மாரியப்பனின் பயிற்சியாளர். சேலம் வந்திருந்த சத்தியநாராயணாவை சந்தித்து பேசினோம்.
"என்னுடைய சொந்த ஊர் கர்நாடக மாநிலம் ஷிமோகா.ரயில்வே துறையில் பணியாற்றி வருகிறேன். 1500 மீட்டர் ஓட்டத்தில் நேஷனல் சாம்பியன் ஷிப் பட்டத்தை 7 முறை பெற்றிருக்கிறேன். தேசிய அளவிலான 4 போட்டிகளுக்கு இயக்குநராகவும் இருந்திருக்கிறேன். இந்திய பாராலிம்பிக் கமிட்டியில் டிப்ளமோ 2 வருடம் முடித்து, 2012-ல் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டி மற்றும் காமன்வெல்த் போட்டியில் இந்தியன் டீமின் கோச்சாக பணியாற்றி இருக்கிறேன். தற்போது ரயில்வேயில் ஃபர்ஸ்ட் கிரேட் ஊழியராக பணியாற்றி வருகிறேன்.
2013-ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த விளையாட்டு போட்டியின்போது தான் மாரியப்பனை முதலில் சந்தித்தேன். அந்த போட்டியில் அவர் தாண்டிய உயரம் 1.75 மீட்டர். இது பாரலிம்பிக்கில் தங்கம் வென்றவரை விட அதிகம். இவருக்கு சரியான பயிற்சி கொடுத்தால், 2016 ரியோ பாராலிம்பிக்கில் எப்படியும் தங்கம் வெல்ல வைக்க முடியும் என நினைத்தேன். அப்போது அவரின் தொடர்பு எண்ணை பெற்றுக்கொண்டு, அதன்பின்னர் அவர் படிக்கும் கல்லூரிக்குச் சென்று கல்லூரி நிர்வாகத்தை சந்தித்து அவனது திறமையை விளக்கினேன். பெங்களூருவுக்கு அழைத்துச் சென்று பயிற்சி அளிக்க அனுமதி கேட்டேன்.
கல்லூரியில் படிப்பு பாதிக்குமே என தயங்கியது கல்லூரி நிர்வாகம். பின்னர் பெற்றோரிடம் இதைப்பற்றி பேசுங்கள் என்றனர். மாரியப்பன் வீட்டுக்குச் சென்று அவரது தாயாரை சந்தித்து பேசினேன். பாராலிம்பிக் போட்டியில் மாரியப்பனை தங்கம் வாங்க வைக்கிறேன் என சவால் விட்டுத் தான் மாரியப்பனை பயிற்சிக்கு அழைத்துச் சென்றேன். மாரியப்பனின் தாயாரும் என்னை நம்பி மாரியப்பனை அனுப்பி வைத்தார்.
அவருக்கு தொடர்ச்சியாக பயிற்சிகள் கொடுத்தேன். உயரம் தாண்டுதலை பொறுத்தவரை உடல் பருமன் ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக உணவு வகையில் கவனம் செலுத்தினேன். மாரியப்பன் ஊரில் இருந்தே சமையல்காரரை அழைத்துச் சென்று ஊட்டச்சத்தான உணவுகளை கொடுத்து வந்தேன். என்னுடைய முயற்சி, பயிற்சியைவிட அவரது திறமை என்பது மிகப்பெரியது.
என் மாணவர்கள் பலர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், காமன்வெல்த் போட்டிகளிலும் பதக்கம் வென்றிருக்கிறார்கள். 2012 லண்டனில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற கிரிஷா என்னுடைய மாணவர் தான். இப்போது 4 பேருக்கு நான் பயிற்சி கொடுத்து வருகிறேன். அதில் இருவர் நிச்சயம் அடுத்த பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வார்கள்," நம்பிக்கையுடன் பேசினார் சத்தியநாராயணா.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.