Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 22, 2016

'நன்றாக பேசி வருகிறார் ஜெ.,' -அப்போலோ அறிக்கை


முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து அப்போலோ 10-வது அறிக்கை வெளியிட்டுள்ளது.இன்று காலை, முதல்வர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவந்தாலும், தீவிர மருத்துவக் கண்காணிப்பு தேவைப்படுகிறது. கார்டன் திரும்புவதற்கு மேலும் சில நாட்கள் ஆகலாம் என்ற செய்தியை வெளியிட்டு இருந்தோம்.  இந்நிலையில்  , 'முதல்வர் அவர்களின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. நன்றாக அவர் பேசி வருகிறார். சிறப்பு மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவர்களின் அறிவுரைகளின் பேரில் சிகிச்சை தரப்படுகிறது. ஊட்டச்சத்து நிபுணர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்' என கூறப்பட்டுள்ளது.

மேலும், தீவிர சிகிச்சை நிபுணர்கள், இதய சிகிச்சை நிபுணர்கள், தொற்றுநோய், சர்க்கரை நோய் குழுவினரது கவனத்திலும், பிசியோத்தெரபி நிபுணர்களால் தொடர் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போலோவின் 9-வது அறிக்கை கடந்த 10-ம் தேதி வெளியாகியிருந்தது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.