Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 21, 2016

முதல்வரின் பேரன் அவரைவிட பணக்காரன்


ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும் தெலுங்கு தேச கட்சியின் பொதுச் செயலாளருமான, நரா லோகேஷ் அவரின் குடும்ப சொத்து மதிப்பை தெரிவித்தார். அவர் கூறியதுபடி, அந்திர முதல்வரின் மொத்த குடும்ப சொத்து மதிப்பு 74 கோடி ரூபாய். சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு 3.73 கோடி ரூபாய்.

நாயுடு குடும்பத்துக்கு சொந்தமான ஹெரிடேஜ் குரூப் நாயுடுவின் மனைவி புவனேஷ்வரியின் பெயரில் உள்ளது. அவருக்கு மட்டும் மிக அதிகமாக, 33.66 கோடி ரூபாய் சொத்து உள்ளது. நாயுடுவின் பேரனும், லோகேஷின் மகனுமான 18 மாத குழந்தை தேவான்ஷ்க்கு 14 கோடி அளவுக்கு சொத்து உள்ளது. இதன்படி பார்த்தால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைவிட அவரது 18 மாத பேரனுக்கு சொத்து அதிகமாக உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.