முதல்வர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் சென்னை காவல்துறை உள்பட அரசு அலுவலகங்களில் தீபாவளி கொண்டாட்டம் களையிழந்துள்ளது.
தீபாவளி பண்டிகையை கொண்டாட்டத்துக்கு மக்கள் தயாராகி வருகின்றனர். சொந்த ஊர்களுக்குச் செல்ல பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதுகின்றன. ஆனால் முதல்வர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அ.தி.மு.க.வினர் மட்டும் தீபாவளி கொண்டாட்டத்தில் ஆர்வம் காட்டவில்லை. முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் அப்போலோ முன்பே தவம் இருக்கின்றனர். இதனால் சென்னை போலீஸாரும் தீபாவளி கொண்டாட்டத்தில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
வழக்கமாக தீபாவளியையொட்டி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கும், உயரதிகாரிகள் அலுவலகத்துக்கும் தீபாவளி பரிசுகளை கொடுக்க பலர் செல்வதுண்டு. ஆனால் இந்த தீபாவளிக்கு யாரும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் செல்லவில்லை. இதற்கு முக்கிய பதவிகளில் இருப்பவர்களின் வாய்மொழி உத்தரவே காரணம்.
அப்போலோவில் பாதுகாப்பில் ஈடுபடும் போலீஸாரின் முகங்களில் தீபாவளி கொண்டாட்டத்துக்கான அறிகுறியே தெரியவில்லை. அதுபோல அரசு உயரதிகாரிகளும் அப்போலோவிலேயே முடங்கி இருப்பதால் அவர்கள் சார்ந்துள்ள துறைகளிலும் தீபாவளி கொண்டாட்டம் இல்லாமல் அலுவலகங்கள் களையிழந்து காணப்படுகின்றன.
இதற்கிடையில் உள்ளாட்சிகளில் பதவிகள் காலியானதால் அங்கும் தீபாவளி கொண்டாட்டம் இல்லை. ஓட்டுமொத்தத்தில் முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அ.தி.மு.க.வினருக்கு இந்த ஆண்டு தீபாவளி இல்லை. ஜெயலலிதா, விரைவில் குணமடைய வேண்டும் என்று அ.தி.மு.கவினர் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் சில காவல் நிலையங்களில் தீபாவளிக்கு அடாவடி வசூல் நடந்துள்ளது. அவர்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்பட்ட பட்டாசு கடைகள் மற்றும் ஸ்வீட்ஸ் கடைகளின் கவனிப்பு போலீஸ் நிலையங்களுக்கு ஏற்கெனவே சென்று விட்டது. நேற்றிரவு சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ள சில காவல் நிலையங்களில் போலீஸ் வாகனத்தில் ரோந்து பணி என்ற பெயரில் கட்டாய வசூலிலும் போலீஸார் சிலர் ஈடுபட்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.