Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 13, 2016

சென்னையில் 3 மாணவிகளின் உயிரைப் பறித்த தண்ணீர் லாரி


சென்னையில் தண்ணீர் லாரி மோதி கல்லூரி மாணவிகள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை கிண்டியில் இன்று பிற்பகலில் சாலையோரம் மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து சென்றனர். அப்போது, வேகமாக வந்த தண்ணீர் லாரி இவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில், கல்லூரி மாணவிகள் காயத்ரி, ஆயிஷா, சித்ரா ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து காவல்துறையினர் விரைந்து வந்து மாணவிகளின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த 3 பேருக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் கத்திபாரா மேம்பாலம்- மெட்ரோ ரயில் நிலையம் வரை கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

"தண்ணீர் லாரி பிரேக் பிடிக்காததால் சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது மோதியது. அப்போது, மாணவிகள் 3 பேர் இதில் சிக்கி உயிரிழந்தனர். லாரி மோதியதில் 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் சேதம் அடைந்தது" என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, கிண்டியில் ஒரு வழிபாதையில் வரும் வாகனங்களின் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கல்லூரி அருகே வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்லம்மாள் கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி கோரிக்கை வைத்துள்ளார்.

இதனிடையே, விருதுநகரை சேர்ந்த லாரி ஓட்டுநர் ராஜேந்திரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தநிலையில், செல்லம்மாள் கல்லூரி எதிரே பேராசிரியைகள், மாணவிகள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.