Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 18, 2016

தமிழகத்துக்கு நீர் திறக்க கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு


மறு உத்தரவு வரும் வரை தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இந்த வழக்கில் தமிழகம் மற்றும் கர்நாடகா தரப்பில் வாதிடப்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு வாதம் தொடங்கியது.

அப்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், நாடாளுமன்றம், அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

மேலும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு இணையானது. நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக முறையிட மாநில அரசுக்கு உரிமையில்லை. நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிராக கர்நாடகா முறையிட முடியாது. நடுவர் மன்ற தீர்ப்பு குறித்து கர்நாடக, தமிழக தரப்பு கோரிக்கையை ஏற்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், ஏற்கெனவே உத்தரவிட்டபடி 2000 கன அடி நீர் திறக்க வேண்டும். மறு உத்தரவு வரும் வரை இதனை பின்பற்ற வேண்டும். சட்டம்- ஒழுங்கு விவகாரத்தை இருமாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும். ஜா அறிக்கை தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் வரும் 25-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். நாளையும் வழக்கு தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்தது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.