Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 9, 2016

முதல்வர் உடல்நிலையை லண்டன் டாக்டர் வைகோவிடம் கூறியது என்ன?



தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து அனைத்து அரசியல்வாதிகளும் பாகுபாடின்றி அப்பல்லோ சென்று மருத்துவர்களிடம் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் சென்றனர்.
அப்பல்லோ சென்று திரும்பியவுடன் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது:  "இன்றைக்கு தமிழகத்திலேயே அனைவருடைய உள்ளத்திலும் கவலை ஏற்படுத்தியிருக்கிற காவிரி பிரச்னையை முறையாக சட்டப்பூர்வமாக அணுகி உச்சநீதிமன்றத்தில் நியாயத்தை உணர வைத்து, பாதுகாத்து கொடுத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா. இந்தநிலையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது குறி்த்து கேள்விப்பட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். நான் மருத்துவர்களிடம் பேசினேன். குறிப்பாக ரிச்சர்டு பீலே, முதலமைச்சரின் சிகிச்சை முறை குறித்து என்னிடம் விளக்கினார். அவருடைய விசிட்டிங் கார்டைகூட என்னிடம் கொடுத்தார். அப்போது அவரிடம், நாங்கள் மனதளவிலே நெகிழ்ந்து போய் இருக்கிறோம். இரண்டு முறை லண்டனில் இருந்து வந்து இருக்கிறீர்கள். எங்களுடைய முதலமைச்சரின் உடல் நலத்தை குறித்த அக்கறையோடு, உங்களைப் போன்ற உயர்ந்த மருத்துவர்களுடைய வைத்தியத்திலேயே நலமாக இருப்பதை நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறேன் என்று சொன்னேன். அவரும் நன்றி தெரிவித்தார். எனவே முதலமைச்சர் ஜெயலலிதா, முழு உடல் நலம் பெற்று இல்லம் திரும்ப வேண்டும் என்று இயற்கை அன்னையுடைய அருளை நாள் யாசிக்கிறேன்"
பின்னர்  புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியதாவது: "முதலமைச்சர் பூரண குணமடைய புதிய தமிழகம் கட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சரின் உடல் நிலை குறித்து அமைச்சரிடம் கேட்டறிந்தேன். முதலமைச்சர் குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என அமைச்சர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.