Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 12, 2016

திருஷ்டி பூசணிக்காய் சாலையில் உடைத்தால் வந்த வினை: ஜவுளிக்கடை ஊழியர் சாவு!


நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள சோழசிராமணியை சேர்ந்தவர் செüந்தரராஜன் (வயது-31). இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஜவுளி கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்தார்.

திங்கள்கிழமை இரவு கடையில் வேலைகளை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். திருச்செங்கோடு வடக்கு ரத வீதியில் சென்று கொண்டிருந்தபோது, ஆயுத பூஜையையொட்டி கடை உரிமையாளர்கள் சாலையில் பூசணிக்காயை உடைத்து போட்டிருந்தனர்.

அப்போது செவுந்தரராஜனின் மோட்டர் சைக்கிள் எதிர்பாராத விதமாக, பூசணிக்காயில் ஏறி வழுக்கியது. இதில் செவுந்தரராஜன் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்து செவுந்தரராஜன் மீது ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள, திருச்செங்கோடு நகரப் போலீஸார் சாலையில் பூசணிக்காய் உடைக்கக் கூடாது என நகராட்சி நிர்வாகம் எச்சரித்தபோதும், விதிகளை மீறி திருஷ்டி பூசணிக்காயை சாலையில் உடைத்தவர்கள் யார்...? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

-சிவசுப்பிரமணியன்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.