October 15, 2016
சென்னை கூவத்தில் சடலமாக மிதந்த இளைஞரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை
சென்னை புதுப்பேட்டையில் உள்ள கூவத்தில் சடலமாக மிதந்த இரும்புக்கடை ஊழியர் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர் முகேஷ். புதுப்பேட்டையில் உள்ள இரும்புக்கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, புதுப்பேட்டையில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்ற அவர், வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் இன்று காலை புதுப்பேட்டையில் உள்ள கூவ ஆற்றில் படுகாயங்களுடன் முகேஷ் சடலமாக மிதப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
6 மாதங்களுக்கு முன், தரமணி போலீசார் திருட்டு வழக்கு விசாரணைக்காக முகேஷை அழைத்து சென்று துன்புறுத்தியதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை கூவத்தில் சடலமாக மிதந்த இளைஞரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 15, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 15, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.