Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 10, 2016

நாட்டில் இனிப் பிறக்கப் போகும் பிள்ளைகளையும் அடகு வைத்த முன்னாள் ஜனாதிபதி



நாட்டில் இனிப் பிறக்கப் போகும் பிள்ளைகளையும் அடகு வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது பிள்ளைக் குட்டிகளை போஷித்துள்ளார் என அனர்த்த முகாமைத்துவ பிரதி அமைச்சர் துனேஸ் கன்கந்த தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் நேற்றைய தினம் நடைபெற்ற மகளிர் அமைப்பு கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,
மஹிந்த ராஜபக்சவை தேசத்தின் தந்தை என கூறுவதனை விடவும் சிறிய தந்தை என்றே கூற வேண்டும்.
மஹிந்த ராஜபக்ச தனது குடும்பம், தனது பிள்ளைகள், தனது சகோதரர்களின் நலனை முன்னிலைப்படுத்தியே செயற்பட்டார். சுருக்கமாக கூறின், மெதமுலன இல்லத்தின் எதிர்கால நலனை அடிப்படையாகக்கொண்டே செயற்பட்டார்.
புதிய மக்கள் சக்தி உருவாக்குவதாக கூறிய கூட்டு எதிர்க்கட்சி இரத்தினபுரியில் பழைய போத்தலில் பழைய சாரத்தை நிரப்பும் பணியையே மேற்கொண்டுள்ளது.
மஹிந்த, பசில், விமல், உதய, வெல்கம, ஜீ.எல் போன்ற சர்ச்சைக்குரியவர்களைக் கொண்டு எவ்வாறு புதிய சக்தியொன்றை உருவாக்க முடியும்?
அண்மையில் இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டமானது சுதந்திரக் கட்சியின் உட்கட்சி பூசலாகவே கருதப்பட வேண்டும்.
பவித்ரா வன்னியாரச்சி தனது பலத்தை நிரூபிக்க இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார் என பிரதி அமைச்சர் துன்கந்த தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.