October 20, 2016
ஜெயலலிதாவால் துரத்தப்பட்ட சசிகலாவின் சித்தப்பா மகன் அப்போலோவில்.. ஏன்..??
முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 28 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை, அவரின் தோழியான சசிகலான உடனிருந்து கவனித்து வருகிறார்.
இதனைத்தொடர்ந்து, ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல சர்ச்சைகளும், வதந்திகளும் பரவியதையடுத்து, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, பாஜக மூத்த தலைவர்கள் வெங்கய்யநாயுடு, அமித்ஷா, அருண்ஜெட்லியும், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரத்துச் செல்கின்றனர்.
இதனையடுத்து, சசிகலாவின் உறவினர்களும் அவ்வப்போது வந்து நலம் விசாரித்துவிட்டு செல்கின்றனர். இந்நிலையில் நேற்று 2.30 மணியளவில் சசிகலாவின் சித்தப்பா மகன் ராவணன் அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார்.
இவர், கடந்த 2011ம் ஆண்டு ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர். முறைகேடு செய்ததாக சிறையிலும் அடைக்கப்பட்டார். இவர் கோவையை மையமாக வைத்து அதிமுகவில் அதிகாரமாக செயல்பட்டவர். இவரின் கட்டுப்பாட்டில்தான் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுச்சாமி மற்றும் ஈரோடு கே.வி ராமலிங்கம் ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வரின் அண்ணன் மகள் தீபா கண்ணீரோடு மருத்துவமனைக்கு வந்தபோது அனுமதிக்காத சசிகலா, ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்ட தன்னுடைய சித்தப்பா மகனை மட்டும் அனுமதித்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது
ஜெயலலிதாவால் துரத்தப்பட்ட சசிகலாவின் சித்தப்பா மகன் அப்போலோவில்.. ஏன்..??
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 20, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 20, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.