Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 10, 2016

பள்ளிக்கு ஷூ போட்டு வராத மாணவருக்கு செருப்பு மாலை அணிவித்து வரவேற்ற ஆசிரியர்



முஜாபர்நகர் : பள்ளிக்கு ஷூ அணிந்து வராத 3ம் வகுப்பு மாணவனுக்கு செருப்பு மாலை அணிவித்து புதுவித தண்டனையை ஆசிரியர்கள் நிறைவேற்றியுள்ளனர்.
உத்தரப் பிரதேசம் மாநிலம், சாம்லி மாவட்டத்தில் உள்ள முஜாபர்நகரில் உள்ள ஒரு பள்ளியில், நேற்று ஒரு 3ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஷூ போட்டு வரவில்லை. ஷூ போட்டு வராத அந்த மாணவனை அழைத்து, அந்த வகுப்பு ஆசிரியர் தண்டனை என்ற பெயரில் செருப்பு மாலை அணிவித்து அவமானப்படுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த அந்த மாணவன் அழுது கொண்டே அவரது தந்தையிடம் சென்று கூறியுள்ளார்.

இதை கேட்டு பதைபதைத்து போன தந்தை விரேந்திர சிங் பாபிசா நகர் காவல் நிலையத்தில் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக புகார் அளித்துள்ளார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.