Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 31, 2016

திருமணமாகி ஒரே மாதத்தில் பெண் தற்கொலை…! `தல தீபாவளிக்கு’ சென்ற இடத்தில் சோகம்…நடந்தது என்ன…?!



திருமணமாகி ஒரு மாத காலமே ஆன புதுப் பெண் ஒருவர் தல தீபாவளிக்காக தனது தாயார் வீட்டிற்கு சென்ற போது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த விஜயலட்சுமி (25) என்ற பெண்ணுக்கும், அவரது உறவினரான ராஜி (27) என்பவருக்கும், ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இந்த நிலையில், தல தீபாவளி கொண்டாடுவதற்கு, புதுமணத் தம்பதி பெண் வீட்டாரின் அழைப்பை ஏற்று அங்கு சென்றுள்ளனர். நேற்று காலை குளிப்பதற்காக சென்ற விஜயலட்சுமி, குளியலறைக்குள் வைத்து விஷம் குடித்துள்ளார்.
தொடர்ந்து, அப்பெண் வாந்தி எடுத்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவளது பெற்றோர் அருகில் உள்ள ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அப்பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து ,போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இந்த திருமணத்தில் விஜயலக்ஷ்மியின் கணவர் ராஜி-க்கு விருப்பம் இல்லை என்றும், திருமணமான சில நாட்களிலேயே ராஜி வீட்டை விட்டு ஓடியதாகவும், அவரை அவரது பெற்றோர் கண்டறிந்து, வற்புறுத்தி வீட்டுக்கு அழைத்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.