October 10, 2016
தமிழகத்தின் தாமஸ் ஆல்வா எடிசன் கார்த்திக் ராஜா!!!
21 வயதில் 21 கண்டுபிடிப்புகள், அத்தனையும் மனித குலத்திற்கு தேவையான கண்டுபிடிப்புகள்.
அறிவியல் கண்டுபிடிப்புகள் என்றாலே, அது மேற்குலக நாடுகள்தான் என்ற விதியை மாற்றி எழுத, ஒரு "இளம் இந்தியா" புறப்பட்டுவிட்டது.
தமிழகத்தின் "தாமஸ் ஆல்வா எடிசன் " என குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு ஒரு இளைஞர் தொடர்ந்து சாதித்து வருகிறார்.
சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் கார்த்திக் ராஜா நம்முடைய நம்பிக்கை நட்சத்திரமாக மின்னுகிறார்.
இது வரை 21 கண்டுபிடிப்புகளை செய்துள்ளார்.
அத்தனையும் நமது அன்றாட வாழ்வில் பயன்படும் "மின் கருவிகள்".
அந்த கருவிகளை பட்டியல் இட்டு உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
அவரது கண்டுபிடிப்புகளில் ஒன்றான E-Aider எனும் கருவி மிக முக்கியமானது. G.E நிறுவனத்தின் ஐந்து சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த கருவியானது மாரடைப்பு நேரத்தில் சிறந்த முதலுதவி கருவியாகும். அதை இதயத்திற்கு அருகில் பொருத்திக்கொண்டு இயக்கினால் ஒருவித அதிர்வலைகளை ஏற்படுத்தி தற்காலிகமாக இதயத்தை இயங்கச் செய்யும். அதற்கிடையில் நோயாளியை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றி விடலாம்.
மற்ற கண்டுபிடிப்புகளை அடுத்தடுத்த பதிவுகளில் விரிவாக எழுதுகிறேன்.
ஒரு காலத்தில் கோவை ஜி டி நாயுடுவைப் பற்றி பல கண்டுபிடிப்பு கதைகளை சொல்வா்கள்.
ஆனால், அவைகளைப் பற்றி விரிவாக நாம் எந்த பாடப் புத்தகத்திலும் படித்ததில்லை.
காரணம், அவருக்கான அங்கீகாரத்தை நாம் அவருக்கு தரவில்லை.
ஆனால், இன்றைய தகவல்- தொழில் நுட்ப யுகத்தில் வாழ்ந்து வருகிறோம்.
எனவே, மக்கள் ஊடகமான இந்த "சமூக வலை" தளங்களில் இது போன்ற தனிச்சிறப்பு ஆளுமைகளை நாம் கொண்டாடி மகிழ்வோம்!
இந்தியா வல்லரசாக நாமெல்லாம் பெரிதாக ஒன்றும் கஷ்டப்படத் தேவையில்லை. ராஜா போன்ற இளம் தலைமுறைகளை ஊக்கப்படுத்தினாலே போதுமானது.
Master Minds - Change the World.
தமிழகத்தின் தாமஸ் ஆல்வா எடிசன் கார்த்திக் ராஜா!!!
Reviewed by மறத்தமிழன்
on
October 10, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
October 10, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.