Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 26, 2016

ஒரு கிராமத்து கதை



அரை நிர்வாணத்துடன் ஓடி விளையாடும் குழந்தை; விறகை வெளியே இழுத்து தீயை குறைத்து விட்டு, கொதிக்கும் உலை அரிசிக்கு உப்பெடுக்க வீட்டிற்குள் போகும் கூன் விழுந்த கிழவி; விலாசம் கேட்டால், வீடு வரை வந்து வழி சொல்லும் வெள்ளந்தியான கிழவன்; எண்ணெய் பூசி படிய வாரிய தலையுடன், சின்ன இடைவேளையிலும் கூட, வீட்டிற்கு ஓடி வரும் அரசு பள்ளிச் சிறுவர்கள்... இப்படி, அடுத்த வெள்ளாமைக்கு உழுது போட்ட நிலங்களைப் போல, ஒப்பனை இல்லாமல் உலவுகின்றனர் 'வாழ்க்கை' கிராமத்து மனிதர்கள்.
சீரும் சிறப்பும்:மரங்களும், வயல்களும் சூழ, கொள்ளிடத்திற்கும், மண்ணியாற்றிற்கும் இடையில் பூத்து நிற்கிறது கிராமம். விவசாயத்தை நம்பி வாழும் நான்கு சமூக மக்களுக்குள், 13 வகையறாக்கள்; அவர்களின் ஒற்றுமையை உறுதி செய்ய, தலா ஒரு நாட்டாமை! ஊரில் நடக்கும் திருமண வைபவங்களில், புது மண ஜோடிகளின் 'பல்லக்கு பவனி' சிறப்பு! பங்குனி இறுதியில், ஒவ்வொரு வகையறாவும், தீ மிதித்து, கிடா வெட்டி கொண்டாடும் திருவிழா பிரசித்தம்!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.