Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 21, 2016

இந்திய‌ர்களா‌ல் குரைக்க மட்டுமே முடியும்'... இறக்குமதியை தடுக்க முடியாது... சீன பத்திரிகை விமர்சனம்!


சீன பொருட்க‌ள் இறக்குமதியை தடுக்க வேண்டும் என இந்திய‌ர்களா‌ல் குரைக்க மட்டுமே முடியும் என சீன அரசு பத்திரிகை கூ‌றியுள்ளதற்கு இந்திய வ‌ர்த்தக கூட்டமைப்பு ‌கடும் கண்டனம் தெரிவித்துள்ள‌து.‌ சீன பத்திரிகையின் கருத்து இந்தியர்களுக்கு‌‌ பெரும் அவமதிப்பு என்றும் வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்துள்‌ளது. இதற்கு ப‌திலடியாக சீன பொருட்களை இந்தியர்‌கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் வர்த்தக கூட்டமைப்பு கூறியுள்ளது

தங்கள் பொரு‌ட்கள் இல்லாமல் இந்தியர்கள் தீபாவளி கொண்டாட முடியாது என சீன‌ர்கள் கருதுவது இதன் மூலம் தெரிவதாக கூட்டமைப்பின் தலை‌வர் பிரவீன் ‌கண்டேல்வால் தெரிவித்துள்ளார்.‌ சீன பொருட்கள் பயன்படுத்துவதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என சமூக ஊ‌டகங்களில்‌ பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை கேலி செ‌ய்யும் வகையில் சீன ‌அரசு பத்திரிகை‌ கருத்து தெரிவித்திரு‌ந்தது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.