Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 17, 2016

பஞ்சாப் முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி



பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சர் பிரசாங் சிஷ் பாதல் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீஸார் தடியடி நடத்தி கலைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முறையாக வேலை வழங்கக் கோரி பஞ்சாப் மாநில சுவிதா சங்கத்தினர், MUKTSAR பகுதியில் உள்ள மாநில முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் வீட்டை முற்றுகையிட்டனர். தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், முறையாக வேலை வழங்கக்கோரி, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அறிவுறுத்தியும் கலைந்து செல்ல மறுத்ததால், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. பதிலுக்கு போராட்டக்காரர்களும் தாக்குதலில் ஈடுபட்டதால், போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.