Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 25, 2016

கபாலி துணை நடிகர்கள் போதை மருந்து வழக்கில் கைது..!



கபாலி படத்தின் துணை நடிகர்களாக நடித்த இருவரை போதை மருந்து வழக்கில் மலேசிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மலேசியாவிலுள்ள ஷா ஆலம் பகுதியில் போதை மருந்து கடத்தல் கும்பலைச் சேர்ந்த இருவரை அப்பகுதி காவல்துறையினர் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து புச்சோங் மற்றும் சன்வே பகுதிகளில் திருடப்பட்ட சில பொருட்களை அடகு வைத்த ரசீதும் கைப்பற்றப்பட்டது.

31 மற்றும் 34 வயதுடைய இந்த இருவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படத்தில் துணை நடிகர்களாக நடித்துள்ளனர்.மலேசியாவில் நடைபெற்ற படப்பிடிப்பில் இவர்கள் இருவரு கலந்து கொண்டிருக்கின்றனர்.இவர்களை இருவரையும் பரிசோதித்த போது,போதை மருந்து உட்கொண்டிருப்பதும் காவல்துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த இருவர் மீதும் போதை மருந்து கடத்தல்,திருட்டு உள்பட 11 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.