Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 16, 2016

உடுமலை அருகே சின்னவீரம்பட்டியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி



உடுமலை அருகே வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
உடுமலை - திருப்பூர் சாலை சின்னவீரம்பட்டியில் பொதுத் துறை வங்கியின் கிளை செயல்படுகிறது. இவ்வங்கி கட்டிடத்தின் முன்பாக, ஏடிஎம் மையமும் உள்ளது. சின்னவீரம்பட்டி, குறிஞ்சேரி, இந்திரா நகர், சேரன் நகர், ஏரிப்பாளையம், பொன்னேரி, அய்யம்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் 500-க்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, மர்ம நபர்கள் சிலர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். பலன் அளிக்காததால் தப்பி ஓடிவிட்டனர். அடையாளம் தெரியாமல் இருக்க, கண்காணிப்பு கேமராவை உடைத்துச் சென்றுள்ளனர்.
அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர், நேற்று காலை 7 ஏடிஎம் மையத்துக்குச் சென்றபோதுதான், கொள்ளை முயற்சி குறித்து தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அவர் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்தில் போலீஸார் விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, பதிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வங்கி ஏடிஎம் மையங்களிலும், வங்கி சார்பில் காவலர்களை நியமிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், மேற்படி வங்கியில் விதிமுறை கடைபிடிக்கப்படவில்லை. கொள்ளை முயற்சி, அதிகாலை சுமார் 1 முதல் 3 மணி அளவில் நடந்திருக்கலாம் என தெரிய வருகிறது.
கடந்த 7-ம் தேதி, சம்பந்தப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் எடுத்ததுபோக, ரூ.3 லட்சம் இருப்பு இருந்துள்ளது. கொள்ளையர்களின் முயற்சி பலன் அளிக்காததால், மேற்கண்ட தொகை தப்பியது.
பெயரளவில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டதால், அதில் இருந்து குற்றவாளிகளை அடையாளம் காண தேவையான தகவல்களை பெற முடியவில்லை. நவீன வசதிகளுடன் கூடிய கேமரா பொருத்த, வங்கி மேலாளருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. உடுமலை குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இவ்வாறு போலீஸார் கூறினர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.