October 5, 2016
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மை வீச்சு
பிகானெர் : ராஜஸ்தான் சென்றுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மை வீசியும், கருப்பு கொடி காட்டப்பட்டும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சென்றுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது இருநபர்கள் மை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்திய ராணுவத்தால் தீவிரவாத பதிலடி தாக்குதல் (சர்ஜிகல் ஸ்டிரைக்ஸ்) நடத்தப்பட்டதற்கு பிரதமர் மோடியை வணங்குகிறேன் என தெரிவித்திருந்த கெஜ்ரிவால், இந்த அதிரடி தாக்குதல் எதுவும் நடக்க வில்லை என பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்து வருகிறது. பாகிஸ்தானின் இந்த மறுப்பை பொய்யாக்கும் விதமாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறியிறுந்தார்.
தாக்குதல் நடத்தப்பட்டது உண்மை தான் இதை வைத்து கெஜ்ரிவால் அரசியல் செய்ய வேண்டாம் என மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்திருந்தார்.
இதற்கு நான் அரசியல் செய்கிறேனா அல்லது நீங்களா என பதில் கேள்வி கேட்டுள்ளார் கெஜ்ரிவால். இதன் காரணமாக ராஜஸ்தானில் கெஜ்ரிவால் மீது மை வீச்சு சம்பவம் நடந்திருக்கலாம என தெரிகிறது. ராஜஸ்தானில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
“என் மீது மை வீசியவர்களை கடவுள் ஆசிர்வதிப்பாராகா... அவர்கள் நலமாக இருக்க நான் ஆசிர்வதிக்கிறேன்” என கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மை வீச்சு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 05, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 05, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.