October 12, 2016
சரி…கட்சியைப் பார்த்துக்கோ…! அண்ணன்..தங்கையை..சேர்த்துக்கோ..! நாள் பார்…! ஒப்படைக்கிறேன்..!?
நேற்று இப்படி ஒரு செய்தி காட்டு தீபோல் பரவியது. கடந்த வாரம் சொர்ணம் அவர்களின் எண்பது வயது விழாவின் போதே அழகிரி பற்றி அனைவரும் சேர்ந்து பேசி இருக்கிறார்கள்.
மீண்டும் அழகிரியை கட்சியில் இணைக்க வேண்டும் என்று மொத்தமாக குரல் கொடுக்க தளபதி அமைதியாக கேட்டுக் கொண்டார்.ஆனால் மறுக்கவில்லை. அதே நேரம் கலைஞர் வேறு ஒரு முடிவிற்கு வந்துள்ளார்.
தளபதியின் நீண்ட நெடிய போராட்டம். பொறுமை. அரசியலில் இருக்கும் நல்லபெயர். கிளீன் இமேஜ்..தலைமைக்கு கட்டுப் படும் அபார விசுவாசம்..! கூடவே தனது வயது,கொஞ்சம் உடல் நலப் பிரச்சனைகள். இப்படி யோசித்து கட்சிப் பொறுப்புக்களை தளபதியிடம் ஒப்படைத்து விடுவது என்று முடிவெடுத்துள்ளார்.
இந்த முடிவை பேராசிரியர், மற்றும் நெருங்கிய வட்டத்தில் ஆலோசித்துள்ளார் கலைஞர்…! அத்தனை பேருக்கும் அதீத மகிழ்ச்சி. பேராசிரியர் தனது பொதுச்செயலாளர் பதவியும் விட்டுக் கொடுத்து ஒய்வு பெற்றுக்கொள்வதாக கூற, இதிலும் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சரி அப்படியானால் அழகிரி, அற்றும் கனிமொழிக்கு என்ன பொறுப்பு,என்பது போன்ற விவாதங்கள் நடை பெற்றுள்ளது. இந்த விஷயங்கள் அனைத்தும் தளபதியிடம் சொல்லப் பட வழக்கம் போல் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக சிரித்தாராம்..
கிட்ட தட்ட தளபதியின் ஐம்பது ஆண்டு கால கடும் உழைப்பிற்கு கிடைத்த பரிசு. அதே சமயம் இது மிகவும் தாமதம்.கடந்த சட்டமன்ற தேர்தல் நேரத்தில் இந்த விஷயம் நடந்திருந்தால் தளபதி தான் இந்நேரம் முதல்வர் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
வருக தளபதி வருக..!!
சரி…கட்சியைப் பார்த்துக்கோ…! அண்ணன்..தங்கையை..சேர்த்துக்கோ..! நாள் பார்…! ஒப்படைக்கிறேன்..!?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 12, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 12, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.