திருவனந்தபுரம் அருகே நோயை குணப்படுத்த பூஜை செய்வதாக கூறி 10ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த போலி பூசாரி கைது செய்யப்பட்டார்.
திருவனந்தபுரம் அருகே போத்தன்கோடு வட்டப்பாறை பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். அவரது பெற்றோர்கள் மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். ஆனாலும் மாணவிக்கு நோய் குணமாகவில்லை.
இதனால் மகளின் நோயை குணப்படுத்த மாந்திரீக பூஜை செய்பவரிடம் உதவி கேட்டு நாடியுள்ளனர். அந்த பூசாரி மாணவியை தனது பூஜை மூலம் குணப்படுத்த முடியும் என்று கூறினார்.
சில நாட்களுக்கு பிறகு அந்த மாணவியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று தனிமையில் விஷேச பூஜை செய்தால் நோய் முழுமையாக குணமடைந்து விடும் என்று பூசாரி தெரிவித்தார்.
அதன்படி பூசாரி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று 3 நாட்களாக பூஜை செய்துள்ளார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு பூசாரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் போத்தன்கோடு காவல்துறையினரிடம் புகார் செய்தனர். அதன்பேரில் காவல்துறையினர் அந்த போலி பூசாரியை கைது செய்தனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.