Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 23, 2016

மோடிக்கு இதைவிட இழிவு வேண்டுமா?



இந்திய ராணுவம் நடத்திய துல்லியத்தாக்குதல் இஸ்ரேல் நடத்தும் துணிச்சலானதாக்குதல்களுக்கு நிகராக உள்ளது என பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.

சத்தமே வராமல் ரகசியமாக அடித்து துவைத்து விட்டோம் என்கிறார் மோடி. அப்படியாஎன்கிறது பாகிஸ்தான். மோடி கூறுவது போன்ற சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் குறித்த ஒரு அடிச்சுவடும் தென்படவில்லை என்கிறது போர் நிறுத்தத்தை கண்காணிக்கும் ஐ.நா குழு.
இந்த யுத்தம் சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள் மற்றும் தகவல்ஊடகங்கள் வழியே நடத்தப்படும் உளவியல் யுத்தம் மட்டுமே, வேறொன்றும் இல்லை என்கிறார் பத்திரிகையாளர் கிஷாலய் பட்டாசார்ஜி. இங்கு அடித்தளமே ஆட்டம் காண்கிறது. அதற்குஆதாரப்பூர்வமான பதில் அளிப்பதுதான் ஒரு நாட்டின் பிரதமருக்கு அழகாக இருக்கும். அதற்கு மாறாக இஸ்ரேல் ராணுவத்தை போன்று துல்லியத் தாக்குதல் நடத்திவிட்டோம் என துள்ளி குதிப்பது அழகல்ல. அதுமட்டுமல்ல,வரலாறு தெரிந்த எவரும் இஸ்ரேலை ஆதரிக்கமாட்டார்கள். காரணம் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் 2 நிகழ்வுகள் உலகை குலுக்கிக் கொண்டிருந்தது. அதில் ஒன்று தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சி நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்னர் 1994ல் முடிவுக்கு வந்தது. அதே காலத்தில் தொடங்கிய பாலஸ்தீன மக்களின் துயரம் இன்றளவும் தொடர்கிறது. இஸ்ரேல் ராணுவத்தின் அடாவடியும், அட்டூழியமும் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. ஒண்ட வந்த பிடாரி, ஊர் பிடாரியை விரட்டியகதையாக, பாலஸ்தீனத்திற்கு வந்த யூதர்கள்,பூர்வீக குடிகளான பாலஸ்தீனியர்களை விரட்டிஅடித்து இஸ்ரேலாக ஆக்கிரமித்திருக்கின்றனர். பூர்வ குடிகளின் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் சூறையாடப்பட்டன. பலலட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். பாலஸ்தீன சுதந்திரபோராட்டம் இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அப்படி அந்நாட்டின் சுதந்திரபோராட்டத்தை நடத்துபவர்களை பயங்கரவாதிகளாக இஸ்ரேல் சித்தரித்து ராணுவ தாக்குதலைநடத்தி வருகிறது. ஐ.நாவில் அதிக முறை கண்டனத்திற்குள்ளான ஒரு நாடு என்றால் அது இஸ்ரேல்தான்.அதே போல் ஐ.நாவில் அமெரிக்காவின் வீட்டோஅதிகாரத்தால் அதிக முறை காப்பாற்றப்பட்டிருக்கும் நாடும் இஸ்ரேல்தான்.
சுமார் 28 முறைக்குமேல் அமெரிக்கா இஸ்ரேலுக்காக தனது வீட்டோஅதிகாரத்தை ஐ.நாவில் பயன்படுத்தியிருக்கிறது. இன்னொருவர் பூமியை ஆக்கிரமித்து உருவாக்கும் ஒரு நாட்டிற்கு தான் பிரதமராக இருக்க முடியாது என விஞ்ஞானி ஐஸ்டீன் மறுத்ததும் வரலாறுதான். இன்னொரு தேசத்தைத் துண்டாடி ரத்தக் கோடுகளால் இஸ்ரேல் என்று ஒரு நாட்டைஉருவாக்குவதை உலகம் ஏற்கக் கூடாது என்று அன்றைக்கே காந்தியடிகள் அறைகூவல் விடுத்தார். இஸ்ரேல் என்ற நாட்டை இந்தியா அங்கீகரிக்கவில்லை. பாலஸ்தீனம் என்பது ஓரே பூமிதான். அதுதான் நாடு. அதைத்தான் அங்கீகரிக்கிறோம் என்று ஜவஹர்லால் நேரு அறுதியிட்டு கூறியதுதான் இந்தியாவின் பாரம்பரியம்,தூங்கும் குழந்தைகளைக் கூட இஸ்ரேல் ராணுவம் விட்டு வைக்கவில்லை. இதைவிட இஸ்ரேலுக்கு இழிவான செயல் வேறு எதுவும் இல்லை என ஐ.நா.சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் பான்- கீ- மூன் கண்டித்தார். அந்தஇனவெறி ராணுவத்தின் செயலையும், இந்திய ராணுவத்தின் செயல்பாட்டையும் பெருமையாக ஒப்பிடுவது யாரை இழிவு படுத்துவது என்பதை மோடிதான் விளக்க வேண்டும்.
நன்றி: தீக்கதிர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.