October 27, 2016
துப்பட்டாவை கழுத்தில் மாட்டி.. கதறக் கதற நடுரோட்டில் மாணவி கொலை..! பைக் கில்லர்ஸ் கொடூரம்..!!
பீகார் மாநிலம், கைமூர் மாவட்டத்தில் பள்ளிக்கு செல்வதற்காக மாணவிகள் ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வாலிபர்கள் 2 பேர் பைக்கில் வந்தனர்.
மாணவிகளின் பக்கம் வந்த அந்த மர்ம நபர்கள் 10ம் வகுப்பு மாணவி சுதா குமாரியின் துப்பட்டாவை அவரின் கழுத்தில் மாட்டி சுமார் 50 மீட்டர் தூரம் நடுரோட்டிலேயே இழுத்துச் சென்றனர். இதனால் மாணவியின் கழுத்து இறுகி அங்கேயே உயிரிழந்தார். பின்னர் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இந்த கொடூர சம்பவத்தால் ஆத்திரமடைந்து, மாணவியின் உடலை நடுரோட்டிலேயே வைத்து, பைக் கில்லர்களை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன்பேரில் அவர்கள் கலைந்துசென்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
துப்பட்டாவை கழுத்தில் மாட்டி.. கதறக் கதற நடுரோட்டில் மாணவி கொலை..! பைக் கில்லர்ஸ் கொடூரம்..!!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 27, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 27, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.