October 20, 2016
ஜவுளிக்கடையின் சுவரை துளையிட்டு கொள்ளை!
சென்னையில் ஜவுளிக்கடையின் சுவரை நள்ளிரவில் துளையிட்டு, 50 லட்சம் ரொக்கம் மற்றும் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள், உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஜவுளிக்கடையின் உரிமையாளர் விஜயன் என்பவர், நேற்றிரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இன்று காலை வழக்கம் போல் கடையை திறக்க சென்றபோது கடையின் முன்பக்க கதவின் ஒரு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து கடையின் பின்புறம் சென்று பார்த்தபோது, சுவர் துளையிடப்பட்டு கடையின் உள்ளே இருந்த 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 லட்சம் மதிப்புள்ள துணிகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அபிராமிபுரம் போலீசார், சம்பவ பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கொள்ளையர்களை அடையாளம் காணும் ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நிகழ்ந்த கொள்ளை சம்பவம், அந்த பகுதி வணிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஜவுளிக்கடையின் சுவரை துளையிட்டு கொள்ளை!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 20, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 20, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.