Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 31, 2016

சுதந்திரமாக மீன் பிடிப்பதை உறுதி செய்யும் வகையில் கோரிக்கை வைக்க முடிவு



இலங்கை மீனவர்களுடனான பேச்சில், சுதந்திரமாக மீன்பிடிப்பதை உறுதிசெய்யும் வகையில் கோரிக்கைகளை முன்வைப்பது என மீனவர் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது

இந்திய இலங்கை மீனவர்களிடையேயான பேச்சு நவம்பர் 2ஆம்தேதி டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேச்சில் இரு நாட்டு மீன்வளத்துறை அமைச்சர்கள் அதிகாரிகள் மற்றும் இலங்கை மீனவர்சங்கப் பிரதிநிதிகள் 10 பேர் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு புதுச்சேரி மீனவர் சங்கப் பிரதிநிதிகள் 17 பேர் கலந்துகொள்கின்றனர்.

இந்நிலையில் இருநாட்டு மீனவர் சந்திப்பில் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் குறித்து ராமேஸ்வரத்தில் மீனவர் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதியில் சுதந்திரமாக மீன் பிடிக்கும் உரிமையை மீட்டுத்தரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை டெல்லியில் நடைபெறும் பேச்சில் வலியுறுத்துவது என இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.