October 26, 2016
இரண்டு நாட்களாக அவரைக் காயப்படுத்தியது யார்…? வாரிசுச் சண்டையா…?
மிகுந்த மன உளைச்சல், மன சோர்வு, யாருக்கு என்ன பதவியை பிரித்துக் கொடுப்பது.? யாரைத் திருப்தி படுத்துவது..! யாரும் யாரும் யார் பேச்சையும் கேட்பதில்லை..
தன்னைப் பார்க்க வரும் நிர்வாகிகள் யாரும் இப்போது வருவதே இல்லை. தன்னைக் கேட்காமல் அறிக்கைகள் வருகிறது.
தான் ஒன்று அறிவித்தால், மாறாக வேறு ஒரு அறிக்கையை தளபதி வெளியிடுகிறார். இதனால் மீடியாக்கள் தனக்கு பவர் இல்லை, தன்னை டம்மி தலைவர் என்று கூறி சிரிக்கிறார்கள்.
இப்படி மன ஆற்றாமையில் தான் கலைஞர் இருந்திருக்கிறார். தயாளு அம்மாள் தெம்பாக இருந்தவரை தனக்கு எவ்வளவு ஆறுதலாக இருந்தார்?
இப்போது அவரும் உடல் நலமின்றி இருக்கிறார். உதவியாளர்கள் மட்டும் வருவதும் தேவைக்கு எதோ செய்வதும் போய் விடுவதும்…!! தவிர கடந்த இரண்டு நாட்களாக மதுரையில் இருந்து அதிக அளவில் பிரஷர் வந்து அவரை கவலையில்ஆழ்த்தியதாகவும் கூறு கின்றனர்.
முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட கலைஞர் சரியாக சாப்பிடுவதே இல்லையாம்…! எல்லாம் சேர்ந்து தான் அவரின் உடல் நிலையை மிகவும் பாதித்து விட்டதாக கூறுகின்றனர் உடன் பிறப்புகள்.
யோசித்துப் பார்த்தால் ஒருவகையில் உண்மை தான். எப்போதும் எறும்பு போல் சுறுசுறுப்பு காட்டி வரும் அவரால் யாரும் இன்றி எதுவும் இன்றி இருக்க இயலாது தானே…!
அதெல்லாம் ஒன்றும் இல்லை தலைவா…நீங்கள் தான் திமுக வின் தலைவர்…என்று ஒரு கோஷம் ஒலித்துக்கொண்டிருக்கிறது..!!
இரண்டு நாட்களாக அவரைக் காயப்படுத்தியது யார்…? வாரிசுச் சண்டையா…?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 26, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 26, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.