Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 12, 2016

ராணுவத் துப்பாக்கி எப்படி அர்ஜூன் சம்பத் வீட்டிற்குள் வந்தது?: ராணுவ வீரர் கேள்வி…



இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் துப்பாக்கி, அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை வைத்து வழிப்பட்ட படத்தை தனது முகநூலில் பதிவிட்டார். இது சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை கிளப்பியதால் அந்தப் பதிவு நீக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர், தடா.ஜெ. அப்துல் ரஹீம் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.அந்தப் புகாரில் அர்ஜூன் சம்பத் வழிபாட்டின் போது பயன்படுத்திய துப்பாக்கி அரசு அனுமதி பெற்றதா என்று அவரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும். மேலும் இது போன்ற ஆயுதங்களை வைத்து வழிபட இந்திய சட்டத்தில் அனுமதி உள்ளதா என்றும் சட்டத்திற்கு புறம்பாக ஆயுதங்களை வைத்து வழிபட்ட அர்ஜூன் சம்பத் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



இதனிடையே இந்திய ராணுவத்தில் பணிபுரிபவரும், முகநூல் எழுத்தாளருமான  சதீஷ் செல்லதுரை எழுதியுள்ள பதிவில், அர்ஜூன் சம்பத் பதிவிட்டுள்ள புகைப்படத்தில் இருக்கும் துப்பாக்கி ஒன்று, ராணுவம் , மாவோயிஸ்ட்கள் பயன்படுத்தும் துப்பாக்கி என்றும் அது எப்படி அர்ஜூன் சம்பத்திற்கு கிடைத்தாது என்றும் பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இதில் நடுவில் இருக்கும் துப்பாக்கி 7.62mm SLR எனப்படும் துப்பாக்கி ஆகும். இந்த ரைபிளை இந்தியாவில் காவல்துறை,ராணுவம், மாவோயிஸ்ட்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

இந்தியக் குடிமகன் ஒருவனுக்கு முறையில் ஏர் கன் ,பிஸ்டல் மட்டுமே தனிப்பட்ட முறையில் வைக்க லைசென்ஸ் தரப்படுகிறது என என் சிற்றறிவு சொல்கிறது.

ஆனால் இந்த சந்து முண்ணனி ப்ரியாணி திருடர்கள் கையில் இது எளிதாக புழங்குகிறது என்றால் காவல்துறை என்ன செய்கிறது?/இதனை போடோஷாப் என ஒதுக்கும் அளவுக்கு இல்லாமல் இவ்னுங்க கேப்மாரித்தனம் செய்வதால் சந்தேகப்பட வேண்டியதாக உள்ளது. காவல் துறை கவனிக்குமா?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.