Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 16, 2016

காவல் நிலையத்திற்கு ​விசாரணைக்காக சென்று வீடு திரும்பிய இளைஞர் தற்கொலை..!



ஈரோட்டில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர், வீடு திரும்பியதும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கருங்கல் பாளையத்தைச் சேர்ந்த பிரபாகரன், கருத்து வேறுபாடால் தனது மனைவியை  விட்டுப் பிரிந்து, பேபி பெண்ணுடன் வாழ்ந்து வந்தார். தனக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தை கேட்டு தகராறு செய்வதாக பேபி கொடுத்த புகாரின் பேரில், பிரபாகரனை போலீஸார் நேற்று விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் வீடு திரும்பியதும் தற்கொலைக்கு முயன்றவரை மீட்டு, வீட்டில் இருந்தவர்கள் மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பிரபாகரனின் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கருங்கல்பாளையம் காவல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.