October 30, 2016
கடற்கரையில் பெண் குழந்தையின் சடலம் - போலீசார் விசாரணை!
நாகர்கோவில் அருகே சங்குதுறை கடற்கரையில் பெண் குழந்தையின் சடலம், கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சங்கு துறை கடற்கரை பகுதியில், தீபாவளியை முன்னிட்டு நேற்று அதிகளவில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து இருந்தனர். இந்நிலையில் அங்கு அழுகிய நிலையில் பெண் குழந்தை சடலம் ஒன்று திடீர் என கரை ஒதுங்கியதால் அப்பகுதி மக்கள் அச்சமுற்றனர்.
இதனையடுத்து அங்கு விரைந்து வந்த சுசீந்திரம் காவல் துறையினர், குழந்தையின் சடலத்தை கைப்பற்றி, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு மாதமே ஆன நிலையில் பெண் குழந்தையை கடலில் வீசி கொன்றவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடற்கரையில் பெண் குழந்தையின் சடலம் - போலீசார் விசாரணை!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 30, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 30, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.