Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 5, 2016

“நான் அம்மா பேசுகிறேன்” ஜெயலலிதா குரலில் வாட்ஸ் ஆப்பில் பேசியது வளர்மதியா?



முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 22ஆம் தேதி இரவு அப்பல்லோ மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டார். மறுநாளே டிஸ்சார்ஜ் என கூறப்பட்ட நிலையில் இதுவரை டிஸ்சார்ஜ் இல்லை.
இதனால் வதந்திகள் றெக்கை கட்டின. திமுக தலைவர் கருணாநிதி முதல் பல கட்சி தலைவர்களும் முதலமைச்சரின் புகைப்படம் உள்ளிட்ட ஆதாரங்களை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். வாட்ஸ் ஆப்பில் முதலமைச்சர் பேச வேண்டும் என நாம் தமிழர் சீமான் உள்ளிட்டோர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் 3 ஆம் தேதி இரவு ஒரு வாட்ஸ் ஆப் ஆடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. தற்போதும் பரவி வருகிறது. அதில் நான் அம்மா பேசுகிறேன். என முதலமைச்சர் குரலில் ஒருவர் பேசுகிறார். சற்று கரகரப்பான குரல். கேட்டவுடன் முதலமைச்சர் தானோ என நம்பத் தோன்றுகிறது. ஆனால் அரசு தரப்பில் அதுபற்றி விளக்கம் இதுவரை இல்லை.
இந்நிலையில் அந்த குரல் முன்னாள் அமைச்சர் வளர்மதியின் குரல் என்ற வதந்தி பரவி வருகிறது. முன்னணி ஊடகங்களும் இதனை செய்தியாக வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.