Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 8, 2016

சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியதால் தற்கொலைக்கு முயன்ற அரசுப் பேருந்து நடத்துனர்



மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அரசுப் போக்குவரத்துக்கழக கிளை மேலாளர் சாதி பெயரை சொல்லி திட்டியதால், அரசுப் பேருந்து நடத்துனர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

திருமங்கலம் மம்சா புரத்தை சேர்ந்தவர் சிவகுமார். திருப்பரங்குன்றம் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனையில் நடத்துனராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் அரசு பணிமனை கிளை மேலாளர் கோபால்சாமி, பொது மேலாளர் ரவிசுந்தர் ஆகியோர் சிவகுமாரை சாதிப் பெயரை சொல்லி பல நாட்களாக திட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சிவக்குமார், வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், சிவக்குமாரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் சிவக்குமார் அளித்த புகாரின் பேரில், அரசு பணிமனை கிளை மேலாளர் கோபால்சாமி, பொதுமேலாளர் ரவிசுந்தர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.