Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 19, 2016

ஈஷா மையத்தின் முறைகேடுகளுக்கு எதிராக போராடியவர் பொய் புகாரில் கைது?



கோவை ஈஷா மையத்தின் முறைகேடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் பொய் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி, அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி மலைவாழ் மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவையை சேர்ந்த சிவா என்கிற யானை சிவசண்முகம் ஈஷா யோக மையத்தின் வனப்பகுதிகளில் யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு, பழங்குடியின மக்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றிற்கு எதிராக மக்களை திரட்டி போராடி வருகிறார்.

இந்நிலையில் கோவை ஆலந்துறை பகுதியை சேர்ந்த மகேஸ்வரி என்ற மலைவாழ் பெண்னிடம் இலவச வீட்டுமனை பட்டா  பெற்று தருவதாக கூறி 4 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாகவும், பணத்தை திரும்ப கேட்டபோது அந்த பெண்ணை மானபங்கம் செய்ததாகவும் கூறி சிவா கைது செய்யப்பட்டார்.

ஆனால் சிவா மீது தொடரப்பட்ட வழக்கு, ஈஷா யோக மையத்தின் பின்னணியில் புனையப்பட்ட பொய்வழக்கு என குற்றம்சாட்டி அப்பகுதியை சேர்ந்த பழங்குடி மக்கள், கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும் சிவாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.