October 26, 2016
பிரபாகரன் கொல்லப்படவில்லை..!! உறுதிப்படுத்துகிறது ராஜபக்சேவின் கருத்து?
இலங்கையின் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்த 2009ம் ஆண்டு ராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. ஆனால் அவர் உயிரிழப்பை உறுதி செய்யும் வகையிலான எந்த ஒரு ஆவணத்தையும் இலங்கை அரசு இதுவரை முன்வைக்கவில்லை.
இதன் காரணமாகவே விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மரண சான்றிதழ் மற்றும் டிஎன்ஏ பரிசோதனை அறிக்கை போன்றவற்றை சமர்ப்பிக்குமாறு இன்றளவிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
பிரபாகரன் உயிரிழப்பை உறுதி செய்யாத நிலையில், 7 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இன்றும் பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறப்படும் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம்.
இந்த நிலையில் பிரபாகரனின் உயிரிழப்பு என்பது பொய்யான ஒன்று என்பதை நிரூபிக்கும் வகையில் அன்மையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சே கருத்து ஒன்றை முன் வைத்துள்ளார். கொழும்பில் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, பிரபாகரன் சடலத்தை பார்க்கும் மனோநிலையில் நான் இருக்கவில்லை என்று ராஜபக்சே கூறி இருந்தார்.
இந்த கருத்து பிரபாகரன் உயிரிழந்ததாக கூறப்படும் கருத்தை மறுக்கும் வகையில் அமைந்துள்ளதாக உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2009ம் ஆண்டு முள்ளி வாய்க்கால் பகுதியில் நடந்த இறுதி யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததாக கூறும் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சே, வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டிருந்தார். போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து நாடு திரும்பிய மகிந்த ராஜபக்சே விமான நிலையத்தில் இருந்து இறங்கிய நிலையில் மண்ணை முத்தமிட்டு யுத்த வெற்றியை வெளிப்படுத்தியதை அனைவரும் அறிந்த ஒன்றே.
குறிப்பாக பிரபாகரன் சடலம் அவரின் முக ஒற்றுமை உள்ள ராணுவ வீரர் ஒருவரின் சடலம் எனவும், பிரபாகரின் உடல் அமைப்பை கொண்ட ஒருவரை மார்பிங் செய்து காட்டப்பட்டுள்ளளதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டு இருந்தது.
எனவேதான் போலியான ஒருவரின் சடலத்தை பார்க்கும் மனநிலையில் ராஜபக்சே அப்போது இருந்திருக்கவிலலை. இதனை உறுதிபடுத்தும் வகையிலேயே அண்மையில் மகிந்த ராஜபக்சே வெளியிட்டுள்ளள கருத்தும் அமைந்துள்ளது என அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரபாகரன் கொல்லப்படவில்லை..!! உறுதிப்படுத்துகிறது ராஜபக்சேவின் கருத்து?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 26, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 26, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.