October 31, 2016
அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டு தாயிடம் ஒப்படைப்பு!
சேலம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை இன்று மீட்கப்பட்டு அதன் தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் மூலம் குற்றவாளியை கண்டுபிடித்து குழந்தையை போலீசார் மீட்டுள்ளனர்.
சேலம் அருகே நீர்முள்ளிகுட்டை பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனர் வெங்கடேஷ் என்பவரின் மனைவி இந்துவுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இந்து உறங்கிய நிலையில், அங்கு வந்த பெண் ஒருவர் அந்த குழந்தையை கடந்த சில தினங்களுக்கு முன்பு கடத்தி சென்றார்.
உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. மகப்பேறு பிரிவில் இருந்த கண்காணிப்பு கேமிராவை சோதனை செய்தபோது, கர்ப்பிணி வேடத்தில் வந்த இளம்பெண் ஒருவர் குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. அந்த பெண்ணை பிடிக்க சேலம் மாநகர காவல்துறை உதவி ஆணையர் ஜார்ஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதையடுத்து, மருத்துவமனையில் இருந்த 26 சிசிடிவி காமிராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள செல்போன் டவரின் மூலம் மேற்கொள்ளப்பட்ட செல்போன் தகவல் பரிமாற்றங்கள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து கர்ப்பிணி போல் நடித்த அந்த பெண் யார் என்று தேடினர். விசாரணையில் அவர் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டைச் சேர்ந்த வெண்ணிலா என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் அந்த பெண்ணிடமிருந்து இன்று குழந்தையை மீட்டனர். பின்னர் உதவி ஆணையர் ஜார்ஜ், சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்று குழந்தையை அதன் தாய் இந்துவிடம் ஒப்படைத்தார். குழந்தை மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியில் நெகிழ்ந்த தாய், ஆனந்த கண்ணீருடன் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.
தனது குழந்தை மீண்டு வந்ததைக் கொண்டாடும் விதமாக அதன் தந்தை வெங்கடேசும் அவரது உறவினர்களும் போலீசார் மற்றும் மருத்துவமனையில் இருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.
அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டு தாயிடம் ஒப்படைப்பு!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 31, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 31, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.