October 17, 2016
சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் நடுரோட்டில் வெட்டி படுகொலை!
சென்னை ஆதம்பாக்கத்தில் ஆட்டோ ஓட்டுநரை நடுரோட்டில் 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆலந்தூர் அடுத்த ஆதம்பாக்கம் மசூதி காலனியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அசாருதீன் என்பவர் ஆட்டோ ஓட்டிவந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு சிட்டிலிங்க் சாலையில் ஆட்டோவில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் அசாருதீனை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆதம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகொலை செய்யப்பட்ட அசாருதீன், கடந்த 2014ல் வேளச்சேரி பகுதியை சேர்ந்த அருள்நிதி என்பவர் படுகொலை வழக்கில் சிறை சென்று தற்பொழுது ஜாமினில் வெளிவந்தவர்.
எனவே முன்விரோதம் காரணமாக இந்த படுகொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் நடுரோட்டில் வெட்டி படுகொலை!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 17, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 17, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.