Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 29, 2016

போனஸ்"ன்னா என்ன..!? பிச்சைக்கு பெயர் போனஸா ..?


இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்பு வார சம்பள முறையே நடைமுறையில் இருந்து வந்துள்ளது...!!
.
ஆங்கிலேயர்கள் மாத சம்பள முறையை அமுல் படுத்தினார்கள் 4வாரங்களுக்கு ஒரு சம்பளம் என கணக்கிட்டு மாத சம்பளமாக கொடுத்தனர்...!!
.
அவ்வாறு மாதத்திற்கு ஒரு சம்பளம் என்றால் வருடத்திற்கு 12 சம்பளம் வருகிறது. ஆனால் 4வாரத்திற்கு ஒரு சம்பளம் என்று கணக்கிட்டு பார்த்தால் வருடத்திற்கு 13 சம்பளம் வர வேண்டும்.
.
இந்தியர்னா சும்மாவா?
அதனை தரும்படி 1930-1940 களில் மஹாராஷ்டிரா வில் உள்ள தொழிற்சங்க ஊழியர்கள் தங்களது 1 மாத சம்பளம் வஞ்சிக்கப் படுவதாக போராடினார்கள்.
.
அதன் விளைவாக அந்த ஒரு மாத சம்பளத்தை எப்போது எப்படி கொடுக்கலாம் என பிரிட்டிஷார் தொழிற்சங்க தலைவர்களுடன் ஆலோசனை செய்தார்கள்...!!
.
அப்போது தான் தீபாவளி / தசரா பண்டிகை பிரசித்தி பெற்ற பண்டிகையாதலால் அதனையொட்டி கொடுத்தால் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அது வசதியாக இருக்கும் என கோரிக்கை வைத்ததின் விளைவாக போனஸ் என்ற பெயரில் முதன் முதலில் 1940ம் வருடம் ஜூன் மாதம் 30ம் தேதி வழங்கப்பட்டது...!!
.
பின்நாட்களில் அது லாப விகிதத்தை கணக்கிட்டு விஸ்தரிக்கப்பட்டது.
.
இன்றைக்கு பல மக்களுக்கு இந்த சரித்திர நிகழ்வு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. !!

ஆனால் ..

இன்றைக்கு ரோட்டுல போறவன் வர்ரவன் எல்லாம் யார் என்னன்னு தெரியாமலேயே கடை கடைக்கு ஏறி இறங்கி பிச்சை எடுப்பது போல பிச்சை எடுப்பதுதான் தீபாவளி போனஸ் என ஆகி விட்டது ...!

இதுல கொடும என்னன்னா பெரிய பெரிய அரசாங்க அதிகாரிகள் முதல் குப்பை அள்ளும் தொழிலாளர் வரை அனைவரும் ஒரு நோட்டை எடுத்துக்கொண்டு கடை கடையாக பிச்சை எடுப்பது உச்சகட்ட கொடுமை ...

சுயமரியாதை ...தன்மானம் என்றால் என்னவென்றே அறியாமல் இப்படி தெருத்தெருவாகச் சென்று பிச்சை எடுக்கும் அவலம் ...!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.