Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 26, 2016

இன்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!



தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இன்று தொடங்கி சிறப்பு பேருந்துகள் நாளை(27ம் தேதி) மற்றும் நாளை மறு நாள்(28ம் தேதி) வரை தொடர்ந்து இய’கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று முதல் சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் இருந்து மட்டும் 11,125 பேருந்துகளும்,பிற பகுதிகளில் இருந்து 10,064 பேருந்துகளும் இயக்கப்படும்.
அதன்படி ஆந்திர மார்க்கமாக செல்லும் பேருந்துகள் சென்னை அண்ணா நகர் மேற்கு பேருந்து நிலையத்தில் இருந்தும், புதுச்சேரி,கடலூர் மார்க்கமாக செல்லும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும், தஞ்சாவூர்,கும்பகோணம் செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானட்டோரியம் பேருந்து நிலையத்தில் இருந்தும், கிருஷ்ணகிரி,திருப்பத்தூர்,ஓசூர் செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்தும் புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதர பேருந்துகள் திருச்சி,மதுரை,திண்டுக்கல், தேனி,போடி,கம்பம் போன்ற பேருந்துகள் வழக்கம் போல கோயம்பேட்டில் இருந்து செயல்படும்.
தீபாவளி முடிந்து பின்னரும் பயணிகள் சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு மீண்டும் திரும்புவதற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிகிறது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.