Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 10, 2016

அதிமுக கவுன்சிலர் ஓட ஓட வெட்டிக் கொலை - திருத்தணியில் பதற்றம்!



திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அதிமுக கவுன்சிலர், மர்ம கும்பலால் ஓட, ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருத்தணி 13-வது வார்டு அதிமுக கவுன்சிலரும், மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளருமான ஆறுமுகம், கண்ணிகாபுரம் சாலையில் உள்ள தனது குடிநீர் ஆலைக்கு காரில் சென்றுள்ளார். அப்போது, காரை மறித்த 5 பேர் கொண்ட கும்பல், ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டி உள்ளது.

இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம் தப்பியோட முயன்ற போதும், விடாமல் துரத்திச் சென்ற அந்த கும்பல், அவரை வெட்டிக் கொன்றுவிட்டுதப்பிச் சென்றது. கடந்த மாதம் இதே போல் ஆறுமுகத்தை வெட்டிக் கொல்ல முயன்ற மர்ம கும்பலை சேர்ந்த ஒருவரை பொது மக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் தற்போது அதே கும்பல் ஆறுமுகத்தை வெட்டிக்கொன்றதா? என்ற என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிமுக கவுன்சிலர் ஆறுமுகத்தை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திருத்தணியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.

இந்நிலையில் கொலை செய்துவிட்டு ஆட்டோவில் தப்பிய ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட மர்ம நபர்கள் 5 பேரை காவல்துறையினர் மூன்று தனிப்படைகளைஅமைத்து தேடிவந்த நிலையில், கொலையாளிகள் பயன்படுத்தி தப்பி சென்ற ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட இருவரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.