Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 16, 2016

தமிழகம் முழுதும் நாளை கருப்பு நாளாக அனுசரிக்கப்பட வேண்டும். அதிகமாக பகிரவும்...



அதிகமாக பகிரவும்...
கூடங்குளத்தில் முதல் இரண்டு அணு உலைகளே தொடர்ந்து இயங்காமல் காயிலான் கடை சரக்காக காட்சியளிக்கும் நேரத்தில் நாளை மதியம் கூடங்குளத்தில் மூன்றாம் நான்காம் அணு உலைகளுக்கான வேலைகளை காணொளி மூலம் மோடியும் புதினும் தொடங்கி வைக்க உள்ளனர். தமிழகம் முழுதும் நாளை கருப்பு நாளாக அனுசரிக்கப்பட வேண்டும். தமிழகத்தை சுடுகாடாக மாற்றும் மோடி அரசையும் அதை முழுமையாக ஆதரித்து ஏற்கும் ஜெயலலிதா அரசையும் வன்மையாக கண்டிப்போம்.
கூடங்குளம் அணு உலை விரிவாக்க திட்டத்தை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள இரண்டு பெரிய அரசியல் கட்சிகளும் -, தி.மு.க, அ. தி.மு.க. - தங்களுடைய நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
இந்திய-அமெரிக்கா அணு உலை ஒப்பந்தம் கையெழுத்து ஆகி 8 வருடங்கள் கடந்துவிட்டாலும் மத்திய அரசால் ஒரு இடத்தில் கூட அணு உலைகளுக்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்க முடியவில்லை. ஆனால் இங்கே கூடங்குளத்தில் மட்டும் மேலும் 4 உலைகள் அமைக்கும் துணிச்சல் அரசாங்கங்களுக்கு எங்கே இருந்து வருகிறது? தமிழக முதல்வர் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருக்கும் நேரத்தில் தமிழகத்தில் உலைகளை அமைக்க கால்கோள் விழா நடத்துவதற்கான அனுமதியை யார் கொடுத்தார்கள்? ஒட்டுமொத்தமாக மாநிலங்களின் சுயாட்சியை குழிதோண்டி புதைக்கும் விழா தான் நாளை நடைபெறும் விழா. ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட 2 அணு உலைகளும் ஒழுங்காகஓடமுடியாத நிலையில் மேலும் 2 உலைகளை ஏன் அமைக்க வேண்டும் ?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.