Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 31, 2016

மக்கள் நலக் கூட்டணி தலைவர்களிடையே கருத்து வேறுபாடில்லை - முத்தரசன்



மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களிடையே கருத்துவேறுபாடு ஏற்படவில்லை என்றும், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நீடிப்பதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கவிடாமல் வைகோ தடுத்ததால் அவர் மீது மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிறத் தலைவர்கள் அதிருப்தியில் உள்ளதாகத் தகவல் வெளியானது. இதனால் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து வைகோ விலகிவிட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த தகவலை இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் மறுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த முத்தரசன், தேர்தலின் போது மக்கள் நலக்கூட்டணியாக தாங்கள் செயல்படுவதாகவும், மற்ற காலங்களில் மக்கள் நலக்கூட்டியக்கமாக செயல்படுவதாகவும் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.