October 6, 2016
தெருஓர சிமன்ட் தொட்டியில் பிணமாக கிடந்த தே.மு.தி.க பிரமுகரின் மூன்று வயது மகன்
பெரியபாளையம்,
பெரியபாளையம் அருகே உள்ள அழிஞ்சிவாக்கம் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். எல்லாபுரம் ஒன்றிய தே.மு.தி.க. தொண்டரணி செயலாள ராக உள்ளார்.
இவரது மனைவி ஹேமலா. மகள்கள் சுரேகா, சுனிதா, 3 வயது மகன் ஹேமனாத்.நேற்று இரவு முருகன் குடும்பத்துடன் வீட்டில் தூங்கினார். அவர் வீட்டு கதவை பூட்டாமல் வைத் திருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை முருகன் எழுந்து பார்த்த போது மனைவியுடன் தூங்கிய மகன் ஹேமனாத்தை காணவில்லை. வீட்டு கதவும் திறந்து கிடந் தது.
அதிர்ச்சி அடைந்த முருகன் மனைவியிடம் விசாரித்த போது எதுவும் தெரியவில்லை. இது பற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் ஊர் முழுவதும் சிறுவன் ஹேமனாத்தை தேடி பார்த் தனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள முட்புதர் அருகே இருந்த சிமெண்டு தொட்டியில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் சிறுவன் ஹேமனாத் பிண மாக கிடந்தான். அவனது வாயில் துணி திணிக்கப்பட்டு இருந்தது.
வீட்டில் தூங்கிய அவனை மர்ம நபர் கடத்தி கழுத்தை நெரித்து கொலை செய்து தொட்டியில் வீசி இருப்பது தெரிந்தது. இது குறித்து பெரியபாளை யம் போலீசில் புகார் செய்யப்பட்டது. டி.எஸ்.பி. மாணிக்கம், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே அப்பகுதி யில் சந்தேகத்திற்கிடமாக நின்ற அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வனை பொது மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர் முருகன் மனைவியின் நெருங்கிய உறவினர் ஆவார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்செல்வன் ஆசிரியை ஒருவரை கத்தி யால் குத்தினார். மேலும் பெண்களிடமும் ரகளை செய்து உள்ளார். இதே போல் தனது மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்து இருக்கிறார். கடந்த சில நாட்களாகவே தமிழ்செல்வன் மனநிலை பாதிக்கப்பட்டது போல் இருந்துள்ளார்.
எனவே அவர் சிறுவன் ஹேமனாத்தை கடத்தி கொன்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார் கள். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
முன் விரோதத்தில் யாரே னும் முருகனை பழிவாங்க அவரது மகனை கடத்தி கொன்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெருஓர சிமன்ட் தொட்டியில் பிணமாக கிடந்த தே.மு.தி.க பிரமுகரின் மூன்று வயது மகன்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 06, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 06, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.