Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 27, 2016

தீபாவளி ஸ்பெஷல்: நமது பாரம்பரிய கிராமத்து சர்க்கரை சுழியன்


தேவையான பொருட்கள் :
கடலைப்பருப்பு - ஒரு கப்
சர்க்கரை  அல்லது பனை  வெள்ளம் தூள்  - 1 1/4 கப்
தேங்காய் துருவல் - அரை கப்
ஏலக்காய் - 4

மைதா - முக்கால் கப்
இட்லி மாவு (புளிக்காதது) - ஒரு கப்
சமையல் சோடா - அரை தேக்கரண்டி
சீனி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிப்பதற்கு

சிறிதளவு சுக்கு பொடி சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்


செய்முறை:
கடலைப்பருப்பை நன்கு கழுவி குக்கரில் போட்டு வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து ஒரு விசில் விட்டு வேக வைத்து தண்ணீரை நன்கு வடித்துக் கொள்ளவும். (தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வடிவது போல் வடித்தால் அந்த தண்ணீரில் ரசம் வைக்கலாம். ரசம் நன்றாக இருக்கும்.)

அதே குக்கரிலோ அல்லது ஒரு பாத்திரத்திலோ மிதமான சூடாக இருக்கும் போதே வடிக்கட்டிய பருப்பை போட்டு கரண்டியால் மசித்து அதனுடன் சர்க்கரை  அல்லது பனை  வெள்ளம் தூள், தேங்காய் துருவல், ஏலக்காய் விதையை பொடி செய்து அதையும் சேர்க்கவும்.

இந்த கலவையை அடுப்பில் வைத்து மசிய பிரட்டி விடவும். சர்க்கரை  அல்லது பனை  வெள்ளம் தூள் நன்கு இளகி தளர்வாகும். வாயில் வைத்துப் பார்த்து உப்பு சுவை இன்னும் வேண்டுமெனில் இன்னும் சிறிது சேர்த்து கொண்டால் சர்க்கரை  அல்லது பனை  வெள்ளம் தூள் சுவை எடுத்து காட்டும். அவற்றை அவ்வப்போது கிளறி கொண்டே இருந்தால் நன்கு இறுகி சுருண்டாற்போல் இறுகலாக ஆகும்.

அதன் பின் அடுப்பிலிருந்து இறக்கி ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும். ஆறிய கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். அதன் பிறகு மைதாவுடன், இட்லி மாவையும் இதர சாமான்களையும் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கட்டி தட்டாமல் மிகவும் தளர்வாக இல்லாமல் கொஞ்சம் கெட்டியாக கலக்கி வைத்துக் கொள்ளவும். (கட்டி கட்டியாக இருப்பது போல் தோன்றினால் மிக்ஸியில் ஊற்றி ஒரு சுற்று ஓடவிட்டோமேயானால் ஸ்மூத்தான கலவையாகும்.)

வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு உருண்டையாக மாவில் முழுவதும் படும்படி தோய்த்து எண்ணெயில் மெதுவாக போடவும்.

அடி சிவந்தது போன்று ஆனதும் மெதுவாக அவற்றை திருப்பி விடவும். ஒரே நிறமாக சிவந்ததும் எடுத்து டிஷ்யு பேப்பரில் வைக்கவும். சுவையான ஸ்பெஷல் சுழியன் தயார். நன்கு மொறு மொறுவென்று சுவையாக இருக்கும்.

இதுபோன்ற கிராமத்து பலகாரங்களை சாப்பிடுவதால்  உடலுக்கு நல்லது  நமது பாரம்பரிய உணவு முறைகள் நமது சந்ததிகள் மறக்காமல் இருப்பார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.