Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 15, 2016

பொது சிவில் சட்டம் மூலம் சிறுபான்மையின மக்களின் உரிமைகளைப் பறிக்க முயற்சி: இஸ்லாமிய இயக்கங்கள்!



பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முனைவதன் மூலம் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சென்னையில் இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர்.

இதில் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ஜவாஹிருல்லா, அரசியல் சாசனத்தின் வழிகாட்டிக் கொள்கையில் அரசு, கல்வியை இலவசமாக வழங்க வேண்டும், சம வேலைக்கு சம கூலி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

ஆனால், அவற்றை அமல்படுத்தாமல், பொது சிவில் சட்டத்தை மட்டும் மத்திய அரசு கையில் எடுத்திருப்பது அதன் சிறுபான்மை விரோத போக்கை வெளிப்படுத்துவதாக குற்றம்சாட்டினர்.

மேலும், பொது சிவில் சட்ட விவகாரம் தொடர்பாக, அனைத்திந்திய முஸ்லீம் தனியார் சட்டவாரியம் மேற்கொள்ளும் அனைத்து வித நடவடிக்கைகளுக்கும் ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.