Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 15, 2016

வீடியோ: சகமாணவனை கொடூரமாக தாக்கிய சகோதரர்கள் மீது வழக்குப்பதிவு



சகோதரர்கள் இருவர் சேர்ந்து தனது சகமாணவனை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பீகார் மாநிலம் முஜாபர்பூரில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சகதரர்கள் ஒரு மாணவனை  தாக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அண்ணன் தம்பிகளான விக்கி மற்றும் விஷால் மற்றும் அவர்களது நண்பர்கள் சேர்ந்து ஒரு ரவுடி கும்பல் போல, அவர்களின் சொல்பேச்சு கேட்காத, அவனது சக மாணவனை கண்மூடித்தனமாக அடித்து உதைத்துள்ளனர்.

அடிதாங்க முடியாமல் காப்பாற்ற அழைக்கும் அந்த மாணவன் எழுந்து நிற்க அவரை மேலும் அடித்து உதைததோடு, பெல்ட் மற்றும் ஷூவால் அடிக்கின்றனர்.

இதை யாரோ சக மாணவன் தனது மொபைல் போனில் வீடியோ பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். வீடியோவை பார்த்த போலீஸார், பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர். போலீசார் 2 சகோதரர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.