Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 9, 2016

பலஸ்தீனியர்களின் வீடுகளை அழித்த இஸ்ரேலிய படைகள்



பலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலியர்களின் நில அபகரிப்புக் கொள்கை தொடர்ந்து வரும் நிலையில், தெற்கு இஸ்ரேலின் நெகெவ் பிராந்தியத்தில் உள்ள Araqeeb கிராமத்தில் உள்ள வீடுகளை இஸ்ரேலிய படைகள் அழித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

வடக்கு பீர்ஷெபாவில் இருந்து சுமார் 8 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள குறித்த பகுதியில் கனரக இயந்தியரங்களுடன் நேற்று (வெள்ளிக் கிழமை) நுழைந்த இஸ்ரேலிய படையினர், அங்கிருந்த பல வீடுகளை அழித்துத் தரைமட்டமாக்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 27 ஆம் திகதி al-Araqeeb எனும் இடத்தில் பலஸ்தீனியர்களுக்கு எதிரான நில அபகரிப்பு செயன்முறையை ஆரம்பித்த இஸ்ரேலிய படையினர், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.




No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.