Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 20, 2016

ஊருக்கே பெரிய மனிதர்..! ஒரே ஒரு நிமிட ‘சபலம்’ !! என்ன கதிக்கு ஆளானார் தெரியுமா..?



அவர் ஒய்வு பெற்ற வங்கி அதிகாரி..! சொற்பொழிவு, ஆன்மீக கூட்டங்கள், சமூக ஆர்வலர், வள்ளல் என்றெல்லாம் அவருக்கு ஊருக்குள் பெயர். இரண்டு பெண் பிள்ளைகள். திருமணம் செய்து கொடுத்துவிட்டார்.
வசதிக்கு குறைவே இல்லை. பூர்வீக சொத்துகள் வேறு..! மனைவியும் நல்ல பெண்தான். மகளுக்கு தலைப் பிரசவம் என்பதால் அமெரிக்கா சென்று விட்டார். பெரியவர் மட்டும் தனியே வீட்டில்..!
சமைப்பது, துணி துவைப்பதற்கு ஒரு வேலைக்கார அம்மாள். இவரின் தனிமையும், அளவில்லாத வசதியும் அந்த அம்மாவிற்கு சபலத்தை ஏற்படுத்தி விட்டது. இரண்டு நாட்கள் லீவு கேட்டுவிட்டு தனது மகளை வேலைக்கு அனுப்பினார்…!
அந்தப் பெண் விவாகரத்துப் பெற்ற முப்பது வயதுப் பெண்..! மெல்ல மெல்ல அந்த பெரியவருக்கு தனது செய்கைகள் மூலம் சபலத்தைத் தூண்டினாள்.
முதலில் கண்டுகொள்ளாமல் இருந்தவருக்கு சபலம் வர ஆரம்பித்தது..! அந்தப் பெண்ணும் அதற்காகவே காத்திருந்தது போல அந்த பெரியவரை படுக்கையில் வீழ்த்தி விட்டாள்.
அடுத்த நாளே  அவளின் சேரிப் பகுதி மக்கள் மொத்தமும் பெரிய மனிதரின் வீட்டின் முன் கூடி கத்திக் கலாட்டா பண்ணி ரகளையில் ஈடுபட்டது.ஆடிப்போனார் பெரியவர்.
அக்கம் பக்கம் மொத்தமும் கூடி விட்டது.விஷயம் போலீஸ் வரை போய்விட்டது..! மனைவி பிள்ளைகளுக்கு தகவல் கொடுத்து வரவைத்தனர் போலீஸ் அதிகாரிகள். அவமானத்தால் கூனிக் குறுகி நின்றார் பெரியவர்.
யாராலும் நம்ப இயலவில்லை. போலீஸ் தரப்பில் வேலைக்காரப் பெண்ணிடம் சமாதானம் பேச அவரோ கல்யாணம் முடிக்கச் சொல்லுங்கள் என்று உறுதியாக கூறி விட்டாள்.
மகள்கள், கணவர்கள் மனைவி அனைவரும் அவரை அருவெறுப்பாக பார்த்தனர். இழிவாகப் பேசினார்கள். அன்று இரவு தனது அறையில் தூக்கு மாட்டிகொண்டு இறந்து போனார் அந்த பெரிய மனிதர்…!
ஒரே ஒரு நிமிட சபலம் மொத்த குடும்பத்தின் மானத்தையும் வாங்கி விட்டது…! அந்த மனைவி ஊரைக் காலி செய்து விட்டு அமெரிக்கா சென்று விட்டார்.
காந்தி புரம் ஏரியாவில் இன்றும் அந்த பெரிய மனிதர் பற்றித்தான் பேச்சு..! கொடுமை..! கொடுமை..!!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.